வியாழன், 11 ஜூலை, 2013

ஈழ தேசம்

இன்றைய சூழலில் நம்மவர்கள் பலர் நினைத்துக்கொண்டிருப்பது “தமிழ் மக்கள் இலங்கைக்கு பிழைப்பு தேடி” போனவர்கள் என்று... பிழைப்பிற்காகவும் சிலர் போனார்கள்., அனால் அதற்கும் பழமையான வரலாறு ஒன்று இருக்கிறது.

இலங்கைக்கும் தமிழருக்குமான உறவு இரண்டாயிரம் வருடங்கள் பழமையானது! கி.மு 145 முதல் 101 வரை “எல்லாளன்” என்ற தமிழ் மன்னன இலங்கையின் வடக்கு பகுதியில் ஆட்சி செய்தான். மேலும் போர்ச்சுக்கீசியர்களுடன் வீரப்போர் புரிந்த “ஆரியசக்கரவர்த்திகளின் கடைசி மன்னன “சங்கிலியன்”. ஆங்கிலேர்களுக்கு எதிராக 1863-ல் போர் புரிந்த தமிழ் மன்னன் “பண்டாரவன்னியன்” இவர்களின் அறியப்பட வேண்டிய வரலாறு அனேக தமிழ் மக்களுக்கு தெரியாமல்,

“பிழைக்க போனவன் தனிநாடு கேட்டால், எப்படி கொடுப்பார்கள்” என்று உலருகின்றனர்.
உண்மை என்னவென்றால் “சிங்களம்” எனும் இனம் இந்தியாவின் “பாட்னாவில்” (பீகார்) இருந்து “அசோக மன்னரால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட விஜயன்” எனும் இளவரசன் இலங்கையின் தெற்கு பகுதி பூர்வக்குடிகளுடன் (தமிழரல்லாத) சேர்ந்து உருவான இனம்தான்.

இன்றைய தினம் இலங்கையில் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான அடையாளங்கள், தமிழரின் இறை வழிபாட்டுத்தலங்கள்,தமிழர்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் என்று அனைத்து அடையாளங்களையும் அதனை நினைவுகளில் சுமந்திருக்கும் தமிழர்களையும் இருந்த இடம் தெரியாமல் அளித்துவருகிறது “ராஜபக்சே தலமையிலான சிங்கள அரசு”.


(ஒவ்வொரு தமிழனும் தெரிந்திருக்கவேண்டிய தகவல் முடிந்தால் உங்கள் நட்புவட்டதினுள் பகிருங்கள்.)

ஈழதேசம் – "தும்பைப்பட்டியான்" 

செவ்வாய், 9 ஜூலை, 2013

எனது கணிப்பில் 2100-ல் இந்தியா

எனது கணிப்பில் 2100-ல் இந்தியா:

*தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை இராணுவத்தினரை கண்டித்து டெல்லிக்கு முதல்வர் கடிதம் (லெட்டர்,கடுதாசி,மடல்.)

*உணவு உற்பத்தி அறவே அழிந்துவிட்டதால் விண்வெளியில் உணவுக்கு பதிலாக விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் "மாத்திரைகள்" ரேசன்கடையில் இலவசமாக வழங்கப்படும்.

*டாஸ்மாக் விற்ப்பனை ஒரு ட்ரில்லியன் ரூபாயாக உயர்வு.

*தமிழர்கள் தமிழை மறந்திருப்பார்கள்.

*சேதுசமுத்திர திட்டம் விரைவில் துவங்குமென அரசு அறிக்கை.

*திருக்குறள் எழுதப்பட்டது அமெரிக்காவில்தான், எழுதியது அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர்.பீட்டர் என்று காப்புரிமை "COPY RIGHTS" வாங்கபட்டிருக்கும்.

*தமிழகத்தில் 4 மணிநேரம் வழங்கப்பட்ட மின்சாரம் 5 மணிநேரமாக உயர்த்தப்படிருக்கும்.

*தேர்தலுக்கு பேஸ்புக் மூலமாக வாக்குப்பதிவு செய்யலாம்.

*தந்தியில் கன்னித்தீவு தொடர்ந்துகொண்டிருக்கும்.

*தமிழகத்தில் ஈழ பிரச்சனைக்காக மாணவர்கள் போராடிக்கொண்டிருப்பர்.

*தே.மு.தி.க அதிருப்தி MLA கள் மீது கட்சி தலைமையிடம் 15 நாளில் தக்க நடவடிக்கை எடுப்பதாக செய்தி.

*இலங்கை அதிபர் பழனியில் சாமி கும்பிட்டுவிட்டு பஞ்சாமிர்தம் வாங்கிசெல்லவார்.

*பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9,999/- ஆக இருக்கும்.

*விஜய் டிவி "சரவணன் மீனாக்ஷி" தொடரில் கணவன் மனைவியிடையே சண்டை நடந்து கொண்டிருக்கும்.

ஞாயிறு, 9 ஜூன், 2013


ஒரு சைக்கிளுக்கு முன் சக்கரம்,பின் சக்கரம் ரெண்டுமே வேணும். நான் முன்னாடி இருக்கேன்னு சொல்லிக்கிட்டு முன் சக்கரம் தனியா போனாலும், நான் என்ன உனக்கு பின்னாடியான்னு பின் சக்கரம் முன்னாடி போக முயற்சி செஞ்சாலும் விபத்துதான். பயணம் தொடராது. #மேல்=கீழ்

நான் காரிலும், பைக்கிலும் செல்லும்போது கடும் வெயிலிலும்,குளிரிலும் மிகவும் வயதானவர்கள் சைக்கிளிலும், நடந்தும் போவதை பார்த்து, எதோ ஒரு குற்றவுணர்வு வருகிறது! 

திருடன் புகுந்த வீட்டுல கூட மிச்சமிருக்கும், தீ பிடிச்ச வீட்டுல மிச்சமிருக்காது!

ஹீரோயினா ஆவணும்னா கும்முன்னு இருக்கணும், நியூஸ் ரீடர் ஆவணும்னா உம்முன்னு இருக்கணும்! -ம.க.பா.ஆனந்த்

மொழிகளை கடந்து ரசிக்க வைக்கும் ஒன்று அழகான பெண்கள்! #Kerala Figures

செடுஞ்சாலைகளில் தீடிரென வாகனங்களில், செடி, கொடி, கிளை, தழை பூத்து தொங்கினால் வண்டி ப்ரேக் டவுன் என ஒதுங்கி செல்க.



Alcoholic Beerக்கும் Non-Alcoholic Beerக்கும் உள்ள 7 வித்தியாசங்கள்:

1, விலை அதிகம் | குறைவு 

2, கசக்கும் | இனிக்கும்

3, போதையேறும் | ஏறாது 

4, கேஸ் அதிகம் | குறைவு

5, குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது | ஓட்டலாம்

6, டாஸ்மாக்கில் மட்டுமே கிடைக்கும் | ஸ்வீட் பேக்கரிகளிலும் கிடைக்கும்

7, குடிக்கலாம் | குடிக்கக்கூடாது  





முன்னாடியெல்லாம், அவா மட்டும்தான் அப்படி பேசுவா, இப்போலாம் எவாள பாத்தாலும் அவா மாதிரியே பேசுறாளே! #பிராமின்ஸ் பாஷை

உண்மையிலேயே ஊருக்கு ஒரு "அப்பு டீம்" இருப்பாய்ங்க! #குட்டிபுலிதானிப்பு

மகா முட்டாள்தனமான தவறு செய்த ஒருத்தனுக்கு வாழ்த்துக்கள் சொல்லிருக்கிங்கன்னா! அது காதலிக்கிறவனுக்கும், காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்றவனுக்கும்தான். 

இயற்கையை ரசிப்பது என்பது நம் தலைமுறையை பொறுத்த வரை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடுவதுதான். #அவதானிப்பு 

எனக்கு "விட்டமின் M" தேவையான அளவு இல்லாததுனால, ரொம்ப கஷ்ட்டமா இருக்கு! 
#Money...Money...Money...

கூகிள்ல balan balaji னு தேடினால் என் போட்டோக்களும், இடையில வித்யாபாலன் சில்பான்ஸ் ஸ்டில்சும் வருது!

மனிதன் மரங்களில் குரங்குகள் போன்று வாழ்வதிலிருந்து தரைக்கு வாழ வந்து 50 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் மனது என்னவோ குரங்கு போலதான் இருக்கிறது.

இவனுங்க என்னமோ ஒழுங்குமாதிரி அவனுங்களை கலாய்க்குரானுங்க., அவனுங்க என்னமோ ஒழுங்குமாதிரி இவனுங்களை கலாய்க்குரானுங்க...

ரெண்டு டீமும் "திருடர்ஸ்தானே!" மக்கள்ஸ் எப்பவுமே மக்குஸ்தானே!

#கரெக்ட்டு... கரெக்ட்டு... நீ மெரட்டு...மெரட்டு...

சின்னவயசுல எனக்கு திங்கள்கிழமை காய்ச்சல் வரும். அதுக்கு மருந்து அம்மா கொடுக்கும் விசிறி கம்பு அடிதான். பள்ளிக்கூடத்துக்கு லீவு போட முயற்சி செய்வேன், அடிச்சு கூட்டிபோயி விட்டுட்டு வருவாங்க!

நவீன பார் வசதின்னு டாஸ்மாக்ல போட்டுருக்காங்களே, உள்ள பொண்ணுங்க பெல்லி டான்ஸ் ஆடுங்களோ?!

உலகஅழகியை விஞ்சும் அழகுடன் ஊருக்கு ஒருபெண்ணாவது இருக்கிறாள்-தற்பெருமைக்காக அழகை விற்காத அவர்கள் தயவில் பெருந்தன்மையுடன் ஜனிக்கிறது அழகு!

சொந்தக்காரங்க கூட இருக்கும்பொழுதெல்லாம் சந்தோசத்தைவிட எப்ப சண்டை வருமோன்னு பயம்தான் அதிகமா இருக்குது.

நோக்கு வர்மத்தால் ஒரு ஃபிகரை வசியம் செய்யலாமென உற்று நோக்கினேன். #அது குனிஞ்சி செருப்பை நோக்குது ##அவ்வ்வ்வ்

வீடு எனும் சொல் பெண்களால் மட்டுமே உயிர்த்திருக்கிறது..

பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்?


இன்னும் எத்தனை முறைதான் லெவல் கிராஸிங்கில் ட்ரெயின் வந்து இந்த ஹீரோ ஹீரோயின வில்லன்கிட்ட இருந்து காப்பாத்த போகுதோ?

டிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்...

#அவதானிப்பு

December 6, 2012 via mobile
"வழி மீது விழி வைத்து"

காதலிக்காக காத்திருக்கும் தருணத்தை விட மோசமானது,
நண்பன் சரக்கு வாங்கி வரும்வரை காத்திருப்பது...
# I'm waiting...
 

சேகுவேரா படம் போட்ட டி-ஷர்ட்டுடன் இண்டிய இளைஞர்கள்., விவேகானந்தர் படம் போட்ட டி-ஷர்ட்டுடன் வெளிநாட்டு இளைஞர்கள்....
அந்நிய மோகம் எல்லா நாடுகளிலும் இருக்கும் போல...
#
அவதானிப்பு

வாழ்க்கை முழுக்க அரசுப்பள்ளி/அரசுக்கல்லூரியிலேயே படித்த ஒருவன்' N.R.I ஆகிவிட்டால் அதன் பெயர்தான்... 
#
பச்சைத்துரோகம்

FOLLOW ME ON FACEBOOK CLICK HERE 

சனி, 8 ஜூன், 2013


அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன்.

நாம இங்க படிச்சிட்டு போய் வெளிநாட்டுக்கரானுக்கு வேலை செய்யறதுக்கு கண்டிப்பா போதி தருமர் DNA தான் காரணமா இருக்கும்.

டீ டம்ளர் வைக்கும் நச் சத்தத்தின் டெசிபல் அது காலையிலிருந்து நீங்கள் கேட்க்கும் எத்தனாவது டீ என்பதை பொருத்தது# 3ம் விதி!

எம்'மதமும' பிடிக்காத யானையை அதன் சம்மதம் இல்லாமல் கோவிலில் பூட்டி வைத்தால் அதற்கு மதம் பிடிக்காமல் என்னை செய்யும்.

சேலரி ஸ்லிப் தரும் சந்தோஷத்தை விட, க்ரெடிட் கார்ட் பில் தரும் பயம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கிறது. #ரிசீவ்ட் க்ரெடிட் கார்ட் பில்.

பெண்கள் திருமணத்திற்குத் தரும் விலைதான் காமம்.ஆண் காமத்திற்குத் தரும் விலைதான் திருமணம்.

உங்க மனைவி மட்டும் சாமி கும்பிடுறாங்க? என நாத்திகரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர்."அது அவ நம்பிக்கை" என்றார்..!.

என்ன தான் தங்கமான மனசுக்காரரா இருந்தாலும் அவர தூக்கிட்டு போய் சேட்டு கடைல அடகு வைக்க முடியாது.

பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் அன்பு அதிகமாக இருக்கிறது.

அமெரிக்கால கரண்ட்கட்டானா 911’போன்பண்ணுவாய்ங்க! ஜப்பான்ல ப்யூஸபுடுங்கி பாப்பாய்ங்க! தக்காளி நம்மூர்ல, பக்கத்துவீட்ட எட்டிபார்க்குறாய்ங்க!.

உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம் !!விஜய் படங்கள் கூட இரண்டாவது இடம்தான் !!!

முன்பெல்லாம் விதவிதமாக செல்போன்கள் வரும். இப்போதோ வெரும் செங்கக்கல் வடிவத்தில் தான் எல்லாம் போன்களும் வருகின்றன. #கற்பனைவறச்சி

ஒலிக்கும் பாடலில் கவனமின்றி ஏதேதோ யோசித்து பின் பாடல் முடிந்ததும் அதை மீண்டும் கேட்க விரும்புகிறது மனம். #சஞ்சலம்

எடுத்த செயலை முடிக்காமல் பாதியிலேயே கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை.

ஜவுளிக்கடையில் நாம் எடுக்கும் துணிமணிகள் ஏதோ சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டது தான். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்.

நேற்று நாம் யார் என்ற பதில் நம்மிடத்தில் எப்போதும் இருக்குமேயானால் தன்னடக்கம் தானாகவே நம்மிடத்தில் எப்போதும் இருக்கும்

நடிகர்நடிகைகள் ஓட்டுபோட லைன்ல நிக்கப்போறோம்னு பத்திரிக்கைகாரங்களுக்கு போன்பண்ணி சொல்லிட்டுதான் வந்து நிப்பாங்கபோல.


மாநில தேர்தல் ஆணையம் எங்களை ஏமாற்றிவிட்டது - ராமதாஸ் # கவலைப்படாதீங்க பஞ்சாயத்த கூட்டி உங்களையே கல்யாணம் பண்ண வச்சிடுவோம்.!

காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: இளங்கோவன் #யோவ் யாருய்யா அது மண்டைல டார்ச்ச அடிச்சது

மனித உறவுகளுக்குள் இடைவெளியை அதிகப்படுத்திய இரண்டு கருவிகள்-டிவியும் செல்போனும் தான்!!!

https://www.facebook.com/k7.bikerbalajiமுப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு சுடிதாரை தடைசெய்ய வேண்டும். யாருபாட்டி, யாருபேத்தினே தெரியலங்கோ.# வாலிப வயசு.

நட்பில் கோவம் இருக்கும்... வருத்தம் இருக்கும்.. ஆனால் வெறுப்பு மட்டும் இருக்காது..