ஞாயிறு, 9 ஜூன், 2013


ஒரு சைக்கிளுக்கு முன் சக்கரம்,பின் சக்கரம் ரெண்டுமே வேணும். நான் முன்னாடி இருக்கேன்னு சொல்லிக்கிட்டு முன் சக்கரம் தனியா போனாலும், நான் என்ன உனக்கு பின்னாடியான்னு பின் சக்கரம் முன்னாடி போக முயற்சி செஞ்சாலும் விபத்துதான். பயணம் தொடராது. #மேல்=கீழ்

நான் காரிலும், பைக்கிலும் செல்லும்போது கடும் வெயிலிலும்,குளிரிலும் மிகவும் வயதானவர்கள் சைக்கிளிலும், நடந்தும் போவதை பார்த்து, எதோ ஒரு குற்றவுணர்வு வருகிறது! 

திருடன் புகுந்த வீட்டுல கூட மிச்சமிருக்கும், தீ பிடிச்ச வீட்டுல மிச்சமிருக்காது!

ஹீரோயினா ஆவணும்னா கும்முன்னு இருக்கணும், நியூஸ் ரீடர் ஆவணும்னா உம்முன்னு இருக்கணும்! -ம.க.பா.ஆனந்த்

மொழிகளை கடந்து ரசிக்க வைக்கும் ஒன்று அழகான பெண்கள்! #Kerala Figures

செடுஞ்சாலைகளில் தீடிரென வாகனங்களில், செடி, கொடி, கிளை, தழை பூத்து தொங்கினால் வண்டி ப்ரேக் டவுன் என ஒதுங்கி செல்க.



Alcoholic Beerக்கும் Non-Alcoholic Beerக்கும் உள்ள 7 வித்தியாசங்கள்:

1, விலை அதிகம் | குறைவு 

2, கசக்கும் | இனிக்கும்

3, போதையேறும் | ஏறாது 

4, கேஸ் அதிகம் | குறைவு

5, குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது | ஓட்டலாம்

6, டாஸ்மாக்கில் மட்டுமே கிடைக்கும் | ஸ்வீட் பேக்கரிகளிலும் கிடைக்கும்

7, குடிக்கலாம் | குடிக்கக்கூடாது  





முன்னாடியெல்லாம், அவா மட்டும்தான் அப்படி பேசுவா, இப்போலாம் எவாள பாத்தாலும் அவா மாதிரியே பேசுறாளே! #பிராமின்ஸ் பாஷை

உண்மையிலேயே ஊருக்கு ஒரு "அப்பு டீம்" இருப்பாய்ங்க! #குட்டிபுலிதானிப்பு

மகா முட்டாள்தனமான தவறு செய்த ஒருத்தனுக்கு வாழ்த்துக்கள் சொல்லிருக்கிங்கன்னா! அது காதலிக்கிறவனுக்கும், காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்றவனுக்கும்தான். 

இயற்கையை ரசிப்பது என்பது நம் தலைமுறையை பொறுத்த வரை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடுவதுதான். #அவதானிப்பு 

எனக்கு "விட்டமின் M" தேவையான அளவு இல்லாததுனால, ரொம்ப கஷ்ட்டமா இருக்கு! 
#Money...Money...Money...

கூகிள்ல balan balaji னு தேடினால் என் போட்டோக்களும், இடையில வித்யாபாலன் சில்பான்ஸ் ஸ்டில்சும் வருது!

மனிதன் மரங்களில் குரங்குகள் போன்று வாழ்வதிலிருந்து தரைக்கு வாழ வந்து 50 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் மனது என்னவோ குரங்கு போலதான் இருக்கிறது.

இவனுங்க என்னமோ ஒழுங்குமாதிரி அவனுங்களை கலாய்க்குரானுங்க., அவனுங்க என்னமோ ஒழுங்குமாதிரி இவனுங்களை கலாய்க்குரானுங்க...

ரெண்டு டீமும் "திருடர்ஸ்தானே!" மக்கள்ஸ் எப்பவுமே மக்குஸ்தானே!

#கரெக்ட்டு... கரெக்ட்டு... நீ மெரட்டு...மெரட்டு...

சின்னவயசுல எனக்கு திங்கள்கிழமை காய்ச்சல் வரும். அதுக்கு மருந்து அம்மா கொடுக்கும் விசிறி கம்பு அடிதான். பள்ளிக்கூடத்துக்கு லீவு போட முயற்சி செய்வேன், அடிச்சு கூட்டிபோயி விட்டுட்டு வருவாங்க!

நவீன பார் வசதின்னு டாஸ்மாக்ல போட்டுருக்காங்களே, உள்ள பொண்ணுங்க பெல்லி டான்ஸ் ஆடுங்களோ?!

உலகஅழகியை விஞ்சும் அழகுடன் ஊருக்கு ஒருபெண்ணாவது இருக்கிறாள்-தற்பெருமைக்காக அழகை விற்காத அவர்கள் தயவில் பெருந்தன்மையுடன் ஜனிக்கிறது அழகு!

சொந்தக்காரங்க கூட இருக்கும்பொழுதெல்லாம் சந்தோசத்தைவிட எப்ப சண்டை வருமோன்னு பயம்தான் அதிகமா இருக்குது.

நோக்கு வர்மத்தால் ஒரு ஃபிகரை வசியம் செய்யலாமென உற்று நோக்கினேன். #அது குனிஞ்சி செருப்பை நோக்குது ##அவ்வ்வ்வ்

வீடு எனும் சொல் பெண்களால் மட்டுமே உயிர்த்திருக்கிறது..

பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்?


இன்னும் எத்தனை முறைதான் லெவல் கிராஸிங்கில் ட்ரெயின் வந்து இந்த ஹீரோ ஹீரோயின வில்லன்கிட்ட இருந்து காப்பாத்த போகுதோ?

டிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்...

#அவதானிப்பு

December 6, 2012 via mobile
"வழி மீது விழி வைத்து"

காதலிக்காக காத்திருக்கும் தருணத்தை விட மோசமானது,
நண்பன் சரக்கு வாங்கி வரும்வரை காத்திருப்பது...
# I'm waiting...
 

சேகுவேரா படம் போட்ட டி-ஷர்ட்டுடன் இண்டிய இளைஞர்கள்., விவேகானந்தர் படம் போட்ட டி-ஷர்ட்டுடன் வெளிநாட்டு இளைஞர்கள்....
அந்நிய மோகம் எல்லா நாடுகளிலும் இருக்கும் போல...
#
அவதானிப்பு

வாழ்க்கை முழுக்க அரசுப்பள்ளி/அரசுக்கல்லூரியிலேயே படித்த ஒருவன்' N.R.I ஆகிவிட்டால் அதன் பெயர்தான்... 
#
பச்சைத்துரோகம்

FOLLOW ME ON FACEBOOK CLICK HERE 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக