வியாழன், 11 ஜூலை, 2013

ஈழ தேசம்

இன்றைய சூழலில் நம்மவர்கள் பலர் நினைத்துக்கொண்டிருப்பது “தமிழ் மக்கள் இலங்கைக்கு பிழைப்பு தேடி” போனவர்கள் என்று... பிழைப்பிற்காகவும் சிலர் போனார்கள்., அனால் அதற்கும் பழமையான வரலாறு ஒன்று இருக்கிறது.

இலங்கைக்கும் தமிழருக்குமான உறவு இரண்டாயிரம் வருடங்கள் பழமையானது! கி.மு 145 முதல் 101 வரை “எல்லாளன்” என்ற தமிழ் மன்னன இலங்கையின் வடக்கு பகுதியில் ஆட்சி செய்தான். மேலும் போர்ச்சுக்கீசியர்களுடன் வீரப்போர் புரிந்த “ஆரியசக்கரவர்த்திகளின் கடைசி மன்னன “சங்கிலியன்”. ஆங்கிலேர்களுக்கு எதிராக 1863-ல் போர் புரிந்த தமிழ் மன்னன் “பண்டாரவன்னியன்” இவர்களின் அறியப்பட வேண்டிய வரலாறு அனேக தமிழ் மக்களுக்கு தெரியாமல்,

“பிழைக்க போனவன் தனிநாடு கேட்டால், எப்படி கொடுப்பார்கள்” என்று உலருகின்றனர்.
உண்மை என்னவென்றால் “சிங்களம்” எனும் இனம் இந்தியாவின் “பாட்னாவில்” (பீகார்) இருந்து “அசோக மன்னரால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட விஜயன்” எனும் இளவரசன் இலங்கையின் தெற்கு பகுதி பூர்வக்குடிகளுடன் (தமிழரல்லாத) சேர்ந்து உருவான இனம்தான்.

இன்றைய தினம் இலங்கையில் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான அடையாளங்கள், தமிழரின் இறை வழிபாட்டுத்தலங்கள்,தமிழர்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் என்று அனைத்து அடையாளங்களையும் அதனை நினைவுகளில் சுமந்திருக்கும் தமிழர்களையும் இருந்த இடம் தெரியாமல் அளித்துவருகிறது “ராஜபக்சே தலமையிலான சிங்கள அரசு”.


(ஒவ்வொரு தமிழனும் தெரிந்திருக்கவேண்டிய தகவல் முடிந்தால் உங்கள் நட்புவட்டதினுள் பகிருங்கள்.)

ஈழதேசம் – "தும்பைப்பட்டியான்" 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக