செவ்வாய், 9 ஜூலை, 2013

எனது கணிப்பில் 2100-ல் இந்தியா

எனது கணிப்பில் 2100-ல் இந்தியா:

*தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை இராணுவத்தினரை கண்டித்து டெல்லிக்கு முதல்வர் கடிதம் (லெட்டர்,கடுதாசி,மடல்.)

*உணவு உற்பத்தி அறவே அழிந்துவிட்டதால் விண்வெளியில் உணவுக்கு பதிலாக விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் "மாத்திரைகள்" ரேசன்கடையில் இலவசமாக வழங்கப்படும்.

*டாஸ்மாக் விற்ப்பனை ஒரு ட்ரில்லியன் ரூபாயாக உயர்வு.

*தமிழர்கள் தமிழை மறந்திருப்பார்கள்.

*சேதுசமுத்திர திட்டம் விரைவில் துவங்குமென அரசு அறிக்கை.

*திருக்குறள் எழுதப்பட்டது அமெரிக்காவில்தான், எழுதியது அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர்.பீட்டர் என்று காப்புரிமை "COPY RIGHTS" வாங்கபட்டிருக்கும்.

*தமிழகத்தில் 4 மணிநேரம் வழங்கப்பட்ட மின்சாரம் 5 மணிநேரமாக உயர்த்தப்படிருக்கும்.

*தேர்தலுக்கு பேஸ்புக் மூலமாக வாக்குப்பதிவு செய்யலாம்.

*தந்தியில் கன்னித்தீவு தொடர்ந்துகொண்டிருக்கும்.

*தமிழகத்தில் ஈழ பிரச்சனைக்காக மாணவர்கள் போராடிக்கொண்டிருப்பர்.

*தே.மு.தி.க அதிருப்தி MLA கள் மீது கட்சி தலைமையிடம் 15 நாளில் தக்க நடவடிக்கை எடுப்பதாக செய்தி.

*இலங்கை அதிபர் பழனியில் சாமி கும்பிட்டுவிட்டு பஞ்சாமிர்தம் வாங்கிசெல்லவார்.

*பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9,999/- ஆக இருக்கும்.

*விஜய் டிவி "சரவணன் மீனாக்ஷி" தொடரில் கணவன் மனைவியிடையே சண்டை நடந்து கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக